தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விதார்த். இவர் நடிப்பில் குற்றமே தண்டனை, ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை ஆகிய தரமான படங்களை தொடர்ந்து ராஜேஸ் இயக்கத்தில் வண்டி என்ற படமும் வந்துள்ளது, இந்த படமும் அந்த லிஸ்டில் இணைந்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே டுட்டூ என்ற பைக் காவல் நிலையத்தில் நிற்கின்றது. அந்த பைக் ஏன் காவல் நிலையத்திற்கு வந்தது என்று கதை விரிகின்றது.
அந்த கதை மூன்றாக நான் லீனியராக வருகிறது, இதில் ஒவ்வொரு கதையும் எப்படி ஒரு இடத்தில் சந்தித்து படத்தின் டுவிஸ்ட் ஒவ்வொன்றாக அவிழ்கின்றது என்பதே வண்டி படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
விதார்த் எப்போதும் கதை தேர்வில் கோட்டை விட மாட்டார், அதை இந்த முறையும் சூப்பராக செய்துள்ளார், விதார்த் வேலையை விட்டு சுற்றும் இளைஞராக நடித்துள்ளார், அவரை போலவே கூட வரும் நண்பர்களும் அப்படியே உள்ளனர்.
ஜான் விஜய் காமெடியில் கலக்கி எடுத்துள்ளார், அதேபோல் வண்டியை திருட இரண்டு இளைஞர்கள் வருகின்றனர், அதில் ஒரு இளைஞரின் நடிப்பு சூப்பர், நல்ல எதிர்காலம் தமிழ் சினிமாவில் அவருக்கு உள்ளது.
படத்தின் முதல் பாதியில் வரும் கதை மிகவும் சுவாரஸ்யமாக நகர்கின்றது, அடுத்து என்ன, அடுத்து என்ன என்று சென்றாலும், இரண்டாம் பாதியில் மூன்றாவது கதை தொடங்கியது கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பிக்கின்றது.
முதல் டுவிஸ்டிலேயே படத்தின் கதை தெரிந்துவிட, அதன் பின் சுவாரஸ்யம் கொஞ்சம் குறையத்தொடங்குகிறது, படத்தின் பின்னணி இசை கலக்கல், ஒளிப்பதிவும் நான் லீனியர் கதையை நமக்கு புரியும் படி தெளிவாக கலர் டோன் மாற்றி காட்டியுள்ளனர்.
க்ளாப்ஸ்
படத்தின் திரைக்கதை அனைத்தும் மக்களுக்கு புரியும் படி காட்டிய விதம்.
படத்தின் கிளைமேக்ஸ் 3 கதையும் ஒரு இடத்தில் சந்திக்கும் விதம் சூப்பர்.
பல்ப்ஸ்
மூன்றாவது கதை வரும் போது ஆடியன்ஸிடமே கொஞ்சம் சுவாரஸ்யம் குறைகிறது. மிகவும் டபுள் மீனிங் வசனம், அதை தவிர்த்து இருக்கலாம்.
மொத்தத்தில் இந்த வண்டி ரேஸ் பைக் போல் செல்லவில்லை என்றாலும், ஒரு முறை உட்கார்ந்து ரைடு வரலாம்.