Loading...
ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் ஆர்ஜன்டீன தலைநகரை சென்றடைந்துள்ளார்.
நேற்று (புதன்கிழமை) தலைநகரை சென்றடைந்த ஜனாதிபதி மக்ரோன் மற்றும் முதல் பெண்மணி பிரிஜிட் மக்ரோன் ஆகியோரை ஆர்ஜன்டீன துணை ஜனாதிபதி கெப்ரியல் மிச்செட்டி வரவேற்றார்.
இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள ஜி-20 மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ளது.
Loading...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகள் ஐரோப்பிய பங்காளிகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மக்ரோன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜி-20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதியும் பங்கேற்கவுள்ள நிலையில், அங்கு ட்ரம்பின் கொள்கைகள் குறித்து மக்ரோன் அதிருப்தி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...