Loading...
சட்டபூர்வமாக கொள்வனவு செய்யப்பட்ட கைத்துப்பாக்கிகள் குற்றவியல் சந்தையில் விற்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பில் கல்கரி நபரொருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.
26 வயதுடைய பிலிப் எட்வர்ட் சரசின் என்பவரே ஆயுத கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
2016ஆம் ஆண்டு சட்டபூர்வமாகக் கொள்வனவு செய்யப்பட்ட ஏழு கைத்துப்பாக்கிகளில் மூன்று துப்பாக்கிகள் பொலிஸ் விசாரணைகளின்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
Loading...
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது ஒரு துப்பாக்கி கல்கரி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.
மற்றுமொரு துப்பாக்கி கனேடிய பசுபிக் ரயில்வே அதிகாரிகளினால் கடந்த டிசம்பர் மாதம் கைப்பற்றப்பட்டிருந்தது.
இதேவேளை, மூன்றாவது கைத்துப்பாக்கி போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை கைது செய்யும் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Loading...