இன்றைய நாடாளுமன்ற அமர்வை ஆளுந்தரப்பு பகிஷ்கரித்துள்ள நிலையில், அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஆளுந்தரப்பு சார்பில் தனியாக கலந்துகொண்டு உரையாற்றிய வருகின்றார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பாக அவர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வை இன்றைய தினமும் புறக்கணித்தது ஆளுந்தரப்பு!
இன்றைய நாடாளுமன்ற அமர்விலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கலந்துகொள்ளவில்லை.
நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு கூடியது. எனினும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இந்த அமர்வை புறக்கணித்துள்ளது.
எனினும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைவாக நாடாளுமன்ற அமர்வு முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.
இதேவேளை, பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை இடைநிறுத்தும் பிரேரணை இன்று சபையில் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.