காட்டு யானையின் தாக்குதலிற்கு இலக்கான இளைஞன் ஒருவர் மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவம் ஒன்று இன்று காலை நிகழ்ந்துள்ளது.
மட்டக்களப்பு திக்கோடை கணேஷா வித்தியாலயத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் பழுகாமத்தை சேர்ந்த வன்னியசிங்கம் வினோதன் என்பவர் இன்று (29) கடமைக்கு செல்லும் போது திக்கோடை 50வீட்டுத்திட்ட பகுதியில் வைத்து காட்டுயானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
காட்டுயானையை கண்ட இவர் உடனடியாக மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பித்துள்ளார்.
விரட்டி வந்த காட்டுயானை அவருடைய மோட்டார் சைக்கிளை முற்றாக சேதப்படுத்தியுள்ளது.
இந்த காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு குறித்த பிரதேச மக்கள் ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.
பலர் இன்றும் தமது வாழ்வாதாரத்துக்காக போராடும் நிலமையையும் காண முடிகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேசிய வன விலங்கு அதிகாரிகள் உரிய முறையினை கையாண்டு பாடசாலை மாணவர்கள் தங்களது கற்றல் நடவடிக்கையினை மேற் கொள்வதற்காகவும் அதே வேளை பிரதேச மக்கள் பயமின்றி வாழ்வதற்காகவும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்பதே மக்களின் பெரும் எதிர்பார்ப்பாகும்