மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் மீது இனந் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரு பொலீசார் கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.
காரதீவைச் சேர்ந்த கணேஷ் தினேஸ்(23),மற்றும் காலியைச் சேர்ந்த பிரசன்ன(34) ஆகிய இரு பொலீசாருமே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கணேஷ் தினேஸ் என்ற பொலீசாரின் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகளை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பாதுகாப்பு தரப்புகள் ஓரணியில் திரண்டு மேற்கொண்டு வருவதால் பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.