காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டினாரா, இல்லையா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் காஜல் பசுபதி.
பிக் பாஸ் பிரபலம் காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டி பொலிசில் சிக்கியதாகவும், அவர் ரூ. 3,500 அபராதம் கட்டியதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்பத்தியது.
ஆனால் அதற்கு நான் குடிபோதையில் கார் ஓட்டவில்லை என்று காயத்ரி ரகுராம் தன் டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தார்.
இதற்கு அன்று இரவு அவருடன் பயணித்த காஜல் பசுபதியிடன் நெட்டிசன் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு காஜல் பதில் அளித்து ட்வீட் போட்டுள்ளார்
அதாவது, அன்று லேட்டாகிவிட்டது. அவர் ரத்த பரிசோதனைக்கு வர தயாராக இருந்தார். பணம் கட்டினால் போகலாமா என்று அவர் கேட்டார். அதற்கு பொலிசாரும் சரி என்று கூறி பணம் வாங்க எங்களுடன் வந்தார்கள். என்னை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு அவர் தன் வீட்டிற்கு சென்றார். அவர் குடித்திருந்தால் அவரை தொடர்ந்து கார் ஓட்டவிட்டது பொலிசார் தவறு தானே என்று கேட்டுள்ளார் காஜல்.
காஜலின் விளக்கத்தை பார்த்த நெட்டிசன்கள் அப்படி என்றால் காயத்ரி சொன்னது பொய்யா? குடிபோதையில் தான் காரை ஓட்டினாரா என்று தெரிவித்துள்ளனர்.
குடிக்கவில்லை என்றால் எதற்காக பணம் தர முன்வந்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நான் குடிக்கவில்லை ஒரு பிரஸ் ரிபோர்ட்டர் குடிபோதையில் சிக்கிவிட்டு என் பெயரை வைத்து செய்தி போட்டுவிட்டார் என்று கூறி வருகிறார் காயத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.
குடிக்கவே இல்லை என்றால் பொலிஸ்காரர் எதற்காக காரை ஓட்ட வேண்டும், எதற்காக ரூ. 3, 500 அபராதம் கட்ட வேண்டும் என்று நெட்டிசன்கள் அடுக்கடுக்காக கேட்ட கேள்விக்கு காஜல் பதிலளிக்க முடியாமல் திணறிவிட்டார்.