Loading...
ஓமந்தை விளாத்திக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வீட்டில் பிறந்த குழந்தை புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது
மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில் கர்ப்பிணியான தாய் குழந்தையை வீட்டிலேயே பிரசவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தபட்டதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையை மீட்டுள்ளனர்.
Loading...
மேலும் குறித்த குழந்தை உயிரிழந்த நிலையில் பிறந்தமையால் அதனை நிலத்தில் புதைத்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். அத்துடன் குழந்தையின் தந்தையை கைது செய்துள்ளதுடன் தாய் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவித்துள்ளனர்.
Loading...