இந்தியாவில் ஆபாச பட இணையதளங்கள் தடை செய்யப்பட்டால், சட்டவிரோத செயல்கள் தலைதூக்கும் என்று ஆபாச படங்களை தயாரிக்கும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை அடுத்து இந்தியாவில் இதுவரை 827 ஆபாச இணையதளங்கள் அண்மையில் தடை செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ஏற்படும் விளைவுகளை குறித்து கனடா நாட்டை சேர்ந்த ஆபாச பட தயாரிப்பு நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆபாச இணையதளங்களை தடை செய்தால், பயனர்கள் சட்டவிரோத இணையதளங்களை நாடுவதற்கு அதுவே வழிவகை செய்யும் என அந்த கனடா நிறுவனம் எச்சரித்துள்ளது. இளம் வயதினர் ஆபாச இணையதளங்களை பயன்படுத்தாமல் இருக்க, பெற்றோரின் கவனம் அவசியம்.
மேலும் தனிநபர் இணைய சேவையை கோரும் போது சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பெறுவது இந்த பிரச்சினைக்கு தீர்வை தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.