அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று தேர்தல்கள் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி நிறைவு செய்யப்பட்டு, 2020 நவம்பர் 13 ஆம் திகதி தேர்தல் ஆணையத்தின் பதவி காலம் முடிவடையும் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் எல்லை நிர்ணய அறிக்கையின் தாமதமே மாகாண சபை தேர்தல்கள் பிற்போட காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு நாடாளுமன்றம் அல்லது நீதிமன்றம் தெதாலை நடத்துமாறு கட்டளை பிறப்பித்தால் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருக்கின்றது என்றும் கூறினார்.