இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் உல்லாச படகு ஏலம் விடப்பட்டதை அடுத்து அதிலிருந்து கிடைக்கும் நிதியை அவர் கடன் பெற்ற இந்திய வர்த்தக வங்கிகள் பெற்றுக்கொள்ள முடியும் என்று லண்டன் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
விஜய் மல்லையா, சுமார் 9 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்களை இந்திய வங்களில் கடனாக பெற்றுக்கொண்டு மீளச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, தற்போது லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மால்டா தீவில், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான F1 tycoon எனப்படும் சொகுசு உல்லாச படகு ஒன்று கைப்பற்றப்பட்டது.
குறித்த படகை, விஜய் மல்லையா செலுத்த வேண்டிய கடன், வழங்கப்படாத சம்பளம் போன்ற காரணங்களுக்காக விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மால்டா நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த படகு உரிய பெறுமதிக்கு ஏலம் விடப்பட்டது.
இதன்மூலம் கிடைக்கும் தொகையில் இருந்து, ஸ்டேப் பேங்க் ஒப் இந்தியா உட்பட அனைத்து இந்திய வங்கிகளும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், மல்லையா மீதான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.