குழுவொன்றினால் யுவதி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுதாவளை பிள்ளையார் ஆலயத்திற்கு பிள்ளையார் விரதம் அனுஷ்டிப்பதற்காகச் சென்ற போரதீவைச் சேர்ந்த யுவதி ஒருவரை நேற்று (சனிக்கிழமை) இளைஞர் குழுவொன்றினால் கடத்திச் செல்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
எனினும் குறித்த கடத்தல் முயற்சி அப்பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டதுடன், கடத்தலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களும் மடக்கிப்பிடிக்கப்பட்டு களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த கடத்தல் முயற்சிக்கு காதல் விவகாரமே காரணமென ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.