Loading...
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
Loading...
இதன்போது நாடடின் அரசியல் நிலைமையை சீராக கொண்டுவர வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பிரதமர் தொடர்பிலும் ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் சந்திப்பினை மேற்கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...