ஆர்ஜன்டீனாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் போது உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய தலைவர்களில் இருவரை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கருங்கடலில் பிரவேசித்த 3 உக்ரேன் கப்பல்களை ரஷ்யா சிறைபிடித்துள்ளது. கப்பலில் சென்ற குழுவினரையும் தடுத்துவைத்துள்ளது.
இதற்கெதிராக உலக நாடுகள் குரல்கொடுத்து வருகின்ற நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை சவுதி அரேபிய முடிவுக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்கும் பிரதமருக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பில் கனடாவும் கண்டனம் வெளியிட்டிருந்த நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மேலும் இவர்கள் இருவருக்கிடையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அறிவிப்பு வெளியாகவில்லை.