ரொறன்ரோ பொலிஸார் மீது நான்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
ரொறன்ரோ பொலிஸை சேர்ந்த குறித்த நான்கு பெண் உத்தியோகத்தர்களும் ரொறன்ரோ பொலிஸார் மீது அத்தகைய குற்றச்சாட்டினைப் பதிவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தாம் பணியில் இருக்கும்போது பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக தெரிவிக்கும் அந்தப் பெண்கள் ரொறன்ரோ பொலிஸார் சேவைகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யவுள்ளதாக அவர்களது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தாங்கள் கடமையில் இருக்கும் வேளைகளில், ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான பாலியல் தாக்கத்தின் ஏற்படுத்தும் குறுந்தகவல்கள் தமக்கு அனுப்பப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
குறுந்தகவல்கள் மட்டுமின்றி, தரக்குறைவான விடயங்கள், படங்கள் என்பனவும் அவர்களுக்கு அனுப்பபபட்டுள்ளதாக, அவை எவ்வளவு மோசமானவை என்பதனை கூறினால் யாராலும் அதனை நம்ப முடியாது என்றும், தனது 40 ஆண்டுகாள வழக்றிஞர் அனுபவத்தில் பெண்கள் உரிமைகளுக்கு எதிரான இவ்வாறானதொரு மீறலை கண்டதில்லை என்றும் அவர்களது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்