மிருகா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படம் குறித்து ராய் லட்சுமி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார். தெலுங்கு, கன்னடத்திலும் படங்கள் வரிசையாக உள்ளன. எனவே சின்ட்ரல்லா படத்துக்குப் பிறகு இதில் இணைந்தேன். படப்பிடிப்புக்கு முன்பாக ஆரம்பகட்டப் பணிகளும் இந்தப் படத்தில் இருந்தன” என்று கூறியுள்ளார்.
சௌகார்பேட்டை படத்துக்குப் பின் இரண்டாவது முறையாக ராய் லட்சுமி, ஸ்ரீகாந்துடன் இந்தப் படத்தில் நடிக்கிறார். “ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடிக்கிறேன் என்று சொல்ல முடியாது. அவரது கதாபாத்திரம் சற்று வித்தியாசமானது. வழக்கமான கதாநாயகன் – கதாநாயகி திரைப்படம் இது அல்ல.
நான் ஒரே மாதிரியான படங்களில் நடித்து அலுப்பாகி விட்டது. எனது தவறுகளை இப்போது சரிசெய்து வருகிறேன். நீயா 2 பாம்புகளைப் பற்றிய படம். சின்ட்ரல்லா ஹாரர் படமாக உருவாகிறது” என்று கூறியுள்ளார்.
மிருகா படத்தை பார்த்திபன் இயக்க, பன்னீர்செல்வம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். இந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கூறிய ராய் லட்சுமி, “நான் விதவையாக நடித்துள்ளேன். நன்கு வடிவமைக்கப்பட்ட முதிர்ச்சியான கதாபாத்திரம். தற்போது பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் ஊட்டிக்குப் பயணமாக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.