புத்தளம் – கீரியங்கள்ளி ஆண்டிகம பிரதான வீதியின் கல்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
ஆண்டிகம பிரதேசத்திலிருந்து உடப்பு பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளிலும், கீரியங்கள்ளி பிரதேசத்திலிருந்து ஆண்டிகம பிரதேசத்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளிலும் கல்குளிப் பிரதேசத்தில் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் படுகாயமடைந்த நிலையில் முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸாரும் மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.