பொது போக்குவரத்துக்கு பாலியல் துன்புறுத்தல் பற்றிய தனது கதையை பகிர்ந்து கொள்வதற்காக ஷியாலினி தைரியமாக வந்துள்ளார். இதோ அவரது அனுபவங்கள்.
“ஒரு மாலை நேரம் சனநெரிசல் மிகுந்த பஸ்ஸில் நான் டியூஷன் முடித்து விட்டு நின்றபடி வந்துகொண்டிருந்தேன். அப்போது என்னருகில் ஒருவர் அமர்ந்திருந்தார். முதலில் அவரை நான் கவனிக்கவில்லை.
பிறகு தான் அவர் என் உட்புறத்தொடையில் அவரது கையை வைத்திருந்தார் அதிர்ச்சியோடு உணர்ந்தேன். எனக்கு என்ன நடக்கின்றது என்று புரிந்து கொள்ளவே சில செக்கன்கள் பிடித்தன. நான் உடல் ரீதியாக துன்புறுத்தப்படுவது இதுவே முதன்முறை.
ஆகவே எனக்கு எப்படி உடனே எதிர்விளைவாற்றுவது என்று புரியவில்லை. நான் மிக மிக கோபம் கொண்டிருந்தேன். உங்கள் பிரச்சனை என்ன? என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நேரடியாகவே அவரிடம் கேட்டு விட்டேன். அவர் சொறி என்றார் பதிலுக்கு! உடனே யோசிக்காமல் என்னிடம் இருந்த பிளாஸ்டிக் தண்ணீர் போத்தலினால் அவரை அடித்து விட்டேன்.
பஸ் ஓட்டுனர், நடத்துனர், சக பயணிகள் யாருமே எனக்கு உதவவில்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கு அருகில் இருந்த பெண் நடந்ததை பார்த்தாலும் எதுவுமே கூறவில்லை. வன்முறை சரியான தீர்வல்ல என்று எனக்குத்தெரியும் ஆனால் அந்த நிமிடம் அது என்ன செய்வதென்றே தெரியாத என்னுடைய உடனடி எதிர்விளைவே. சிறிது காலத்துக்கு பின் நான் என் பெற்றோரிடம் நடந்ததை சொன்னேன். என்னுடைய அப்பா என்னை ஆதரித்ததோடு இதற்குப்பிறகு இனிமேல் அவன் இன்னொரு பெண்ணிடம் அப்படி நடந்து கொள்ளமாட்டான் என்றார்.”- ஷியாலினி
பொதுப்போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதை நீங்கள் பார்க்க நேரிட்டால் இடையிடுங்கள், துணிந்து பேசுங்கள், மாற்றமே நீங்களாகுங்கள். பகிருங்கள்.
https://www.unfpa.org/sites/default/files/16-stories/09_Shiyalni_WEB_story_SUB_compressed_TOP.mp4