தற்போதைய காலத்தைப் பொருத்தவரை மொபைல் போனில் தான் எல்லாமே நடக்கிறது. பொருள்கள் வாங்குவதிலிருந்து அனைத்து விதமான செயல்களும் அதில் தான் அடங்கியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, புதிய நண்பர்களுடன் பழக்கம் வைத்துகொள்ள பல டேட்டிங் அப்ளிகேஷன்கள் வேறு உள்ளன.
அந்த வகையில், ஒரு பிரபல டேட்டிங் அப்ளிகேஷன் முலம் இந்தோனேஷியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வாலிபருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், இருவரும் செல்போன் எண்களை பறிமாறிக் கொண்டுள்ளனர்.
நாளுக்கு நாள் இவர்களுக்குள் நட்பு அதிகமாகியது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் பர்ச்சேசிற்காக ஷாப்பிங் மாலுக்கு சென்றனர். அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணின் காரை திருடி சென்றுவிட்டார். இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்