1990 களின் இறுதியில் இலங்கையின் முதல்தர பணக்காரராக வலம் வந்தவர். செலான் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் அதிபதி.
2000 ஆண்டளவில் சந்திரிகா அரசு பொருளாதார இறக்கத்தில் தள்ளாடியபோது தனக்கு நிதி அமைச்சு பதவியை தந்தால் அரசுக்கு கடன் வழங்கி பொருளாதார சீர்குலைவை சரி செய்வேனென்று சந்திரிகாவோடு டீல் பேசியவர் ஆனால் சந்திரிகா அதை ஏற்கவில்லை.
பின்பு மகிந்தவின் காலத்தில் ஆமி ஹெலிகொப்டரை அனுப்பி ஹோமகவில் தான் நிற்பதாகவும் உடனடியாக சந்திக்க வருமாறு கொத்தலாவலயை கூப்பிடிருக்கிறான் மகிந்த.
இவர் ஹெலிகொப்டரில் ஏற மறுத்தாராம் ஏனெனில் ஆமி ஹெலிகொப்டர் என்பதால் புலிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்படலாமென்று நினைத்தார்.
பயப்படாமல் வாருங்கள் லலித் மிக முக்கிய விடயமொன்று பேசவேண்டியுள்ளதென்று என்று தெரிவித்தார் சரியென்று ஏறி இறங்கியுள்ளார் ஹோமாகவில் மகிந்த நின்ற இடத்தில் அங்கே நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் கூடியிருந்தனராம்.
விளையாட்டு அரங்கு ஒன்று நிர்மாணிக்கபட ஆயத்த மாகிக்கொண்டிருக்கின்றது ஒரு திட்ட வரைவை காட்டியபடி பாருங்கள் லலித் இந்த ஸ்ரேடியத்தை இந்த ஸ்ரைல்லதான் கட்டப்போறன் ஆனால் என்னுடைய அரசிடம் காசு இல்லையே என்று கவலைப்பட்டானாம் மகிந்த தனது வாயை சும்மா வைத்திருக்க தெரியாமல் நூறு மில்லியன் ரூபாயை உடனே தருவதாக கூறியுள்ளார் லலித்.
பெரிய ஆரவாரத்தோடு அங்கு நின்ற அனைவரையும் அழைத்த மகிந்த இவர்தான் தேசமான்ய லலித் கொத்தலாவல இலங்கையின் மிகப்பெரிய புள்ளி பல சமூக சேவைகளையும் ஆற்றியவர்.
இந்த ஸ்ரேடியத்தை தானே கட்டிதருவதாக வாக்குறுதி அளித்துள்ளார் என்றாராம். அவர்களும் பெருமகிழ்ச்சியோடு கைதட்டினார்களாம் இதற்கு லலித் கொத்தலாவல ஸ்ரேடியம் என்றே பெயர் சூட்டுவோம் என்று சொன்னதோடு நிற்காமல் ஆனந்தக் கண்ணீர் வடித்துக்கொண்டு கட்டியணைத்தானாம் மகிந்த.
கொள்பிட்டி சினமன் கிரண்ட் ஹோட்டல் அருகே லலித்துக்கு சொந்தமான இடத்தில் மிகப்பெரிய கட்டட வேலைப்பாடு நடந்தகொண்டிருந்தது. அதிலே நான்கு மாடிகள் தனக்கு தரவேண்டுமென்று கூறியுள்ளான் கோத்தாபய இவர் மறுத்திருக்கின்றார் உடனே கோல்டன் கீ எனும் நிதிப்பரிமாற்றத்தில் லலித் கொத்தலாவலயை சிக்கவைத்தார்கள்.
ராஜபக்ச குடும்பத்தினர் வாரா வாரம் லலித்தும் மனைவியும் பொலிஸ் நிலையத்திற்கும், நீதிமன்றுக்கும் அலைய நேரிட்டது இறுதியில் இருவரையும் பிடித்து சிறையிலும் போட்டார்கள் பல வருடங்களாக சொத்துக்கள் முடக்கப்பட்டன .
சிறையிலேயே நோயாளியாகினர் கணவனும் மனைவியும் சக்கர நாற்காலியிலே வெளியே வந்தார் லலித் ஒரு நாள் தொலைக்காட்சி செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஹோமகமவில் மகிந்த ராஜபக்ச ஸ்ரேடியம் ஜனாதிபதி மகிந்தவால் திறந்து வைக்கப்பட்டதாக செய்தி போய்க்கொண்டிருந்ததாம்.
மேடையில் உரையாற்ற மகிந்த வந்தானாம் எல்லோரும் ஜெயவேவா ஜெயவேவா மகிந்த மாத்தயாட்ட ஜெயவேவா என்று கத்தினார்களாம். ஸ்ரேடிய திறப்பு விழாவில் எங்கேயும் தனது பெயர் கூட உச்சரிக்கப்படவில்லையென்று மிகுந்த வேதனைப்படுகிறார்.
இலங்கையின் மிகப்பெரிய கோடீஸ்வரருக்கே இந்த நிலைமையென்றால் ராஜபக்ச குடும்பத்தினருக்கு கால் கழுவி பெரும்பணக்காரராக வரவேண்டுமென்று பேராசையில் திரிகின்ற தமிழர்கள் சிலரை நினைத்தாலே சிரிப்புத் தான்.
மஹிந்த ராஜபக்சவின் கெரி …. வேலை …மஹிந்த ராஜபக்ச கெரியன் ….
Publiée par ஆரம்பம் sur Vendredi 30 novembre 2018