அமைதியான வாழ்க்கையை விரும்பும் புனர்பூச நட்சத்திர அன்பர்களே! இந்த குருபெயர்ச்சி உங்கள் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு காட்டும் விதமாக அமைகிறது.
குடும்பத்தில் அனைவரும் உங்களை மதித்து, உங்கள் பேச்சுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக உடம்பில் இருந்த நோய் குணமாகும். எந்த தொந்தரவும் இருக்காது.
தொழிலில் இதுவரை இருந்த தடைகள் விலகும். உங்கள் தொழிலின் உச்சத்தை நீங்கள் அடைய வழி வகுக்கும்.
கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உத்யோகஸ்தர்கள் உங்களின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றத்திற்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்திருப்பீர்கள்.
அவை இப்போது உங்களுக்கு விரும்பிய படியே கிடைக்கும்.கவலை வேண்டாம். பெண்களுக்கு நிம்மதியான காலகட்டமாக இருக்கும். சரியான நேரத்தில் உறங்காமல் தவித்து வந்த காலகட்டங்கள் மாறும். பயணம் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் அகலும். சிலர் பாதியில் நிறுத்திய படிப்பைத் தொடரவும் வாய்ப்பு கிடைக்கும்.
அரசியல் துறையினருக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறையும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.அடிக்கடி வெளியூர் சென்று வரவேண்டிய திருக்கும். கலைத்துறையினருக்கு யோகமான காலகட்டம்.
அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் பெயர் அனைவருக்கும் தெரியும் வகையில் சில முக்கிய படங்களில் நடிப்பீர்கள்.
பூசம் நட்சத்திரம்
தாய் தந்தையரை போற்றும் பூச நட்சத்திர அன்பர்களே! இந்த குருபெயர்ச்சி பெண்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
அவரவர்கள் விருப்பம் நிறை வேறும். குடும்பத்தில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் ஆலோசித்து முடிவு செய்வீர்கள்குடும்பத்துடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள்.
பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு இந்த குரு பெயர்ச்சி சிறந்த அடிக்கல்லாக இருக்கும்.
தொழிலில் உழைப்புக்கேற்ற பிரதிபலனுக்காக போராட்டங்களைச் சந்தித்த நீங்கள் தற்போது அதற்கான பலனை பெறப்போகிறீர்கள்.உங்களின் தொழிலில் நீங்கள் வெற்றி அடைவீர்கள்.
உத்யோகஸ்தர்கள் உங்களின் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று இதுவரை நீங்கள் அடைந்த மனக்கஷ்டம் இனி தீரும். உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
பெண்களுக்கு பயணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
கவலை வேண்டாம்.மாணவர்களுக்கு பணத்தால் தடைபட்ட கல்வியும் சிலருக்கு தொடர வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியருடன் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் மாறும். அரசியல்துறையினருக்கு புதிய தொழில் தொடங்கும் யோகமும் உண்டாகும்.
உங்களைப்பற்றி குறை கூறியவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். கலைத்துறையினருக்கு கதை இலக்கியத்தைப் பொறுத்த வரை சிலர் விருதுகள் பெறவும் வாய்ப்பு உள்ளது. சிலர் அரசின் விருதுகளாலும் கௌரவிக்கப் படுவீர்கள்.
ஆயில்யம் நட்சத்திரம்
உயர்வான எண்ணத்தைக் கொண்டிருக்கும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களே! இந்த குருபெயர்ச்சியால் அனைவராலும் பாராட்டப் படுவீர்கள்.
குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும்.குடும்பத்தில் சுபகாரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். ஆன்மீக தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.
குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்கள் கூறும் அறிவுரையை கேட்டுக் கொள்ளுங்கள் தொழில் செய்பவர்கள் கடல் தாண்டிச் சென்று வியாபாரம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பாராத பண வரவு இருக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு மேலிடம் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அவற்றை சிறப்பாக செய்வதன் மூலம் உங்கள் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியவரும். பெண்களுக்கு குடும்பத்தில் உங்களைப் புரிந்து நடந்து கொள்வது உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு தேவையானதை செய்து கொடுத்து மகிழ்ச்சியடைவீர்கள்.
மாணவர்களில் தொழிற்கல்வி பயில்வோருக்கு சில சலுகைகள் கிடைக்கும். வெளியூர் சென்று தொழிற்சாலைகளில் செயல்முறையில் பயில வாய்ப்புகளும் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு மனதிற்கு நிம்மதி தரும் சில காரியங்கள் நடக்கும்.
கட்சித் தொண்டர்கள், மேலிடம் என அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு உங்கள் புகழ் உயரும் அளவிற்கு ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு விருதுகள் கிடைக்கும். அதனால் தன்னம்பிக்கை வளரும்.