தெலுங்கானா மாகாணத்தில் உள்ள வாலிபர் ஒருவர் தனது நாக்கை திடீரென வெட்டி கோவில் உண்டியலில் காணிக்கையாக போட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் வரும் 7ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்துவிட்ட நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அவர்களின் தீவிர தொண்டர் ஒருவர் சந்திரசேகரராவ் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக கோவில் உண்டியலில் நாக்கை வெட்டி போட்டுள்ளார்.
நாக்கையா வெட்டுவது
இந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த வாலிபருக்கு மீண்டும் நாக்கை ஒட்ட வைக்க முடியுமா? என்று மருத்துவர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஒரு அரசியல் தலைவருக்காக நாக்கை வெட்டிய தொண்டரின் தீவிர விசுவாசம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.