நடிகர் கிங்காங் 300 படங்களுக்கு மேல் நடித்து தனக்கென ஒரு பாணியை வைத்திருப்பவர்.
தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாக ஐந்து மொழிகளில் நடித்து வருகிறார். இவரின் சாதனையைக் கண்டு ஊனமுற்றவர் பிரிவில் இவருக்கு தேசிய விருது வழங்கி கெளரவத்திருந்தனர்.
நடிகர் கிங்காங் அதிசய பிறவி படத்தில் ரஜினியுடன் அறிமுகமானார். கடந்த 2007இல் கலைத்துறையில் சாதனை புரிந்ததற்காக முன்னாள் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவிடமிருந்து விருது பெற்றுள்ளார்.
அந்த விருதை சிங்கப்பூர் அசன்டாஸ் என்ற நிறுவனம் வழங்கியது. அதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கையால் பெற்ற தேசிய விருது முக்கியமானது.
ஐந்தாயிரம் மேடை நிகழ்ச்சிகள், ஐந்து மொழிகளில் நடித்த மாற்றத்திறனாளி கலைஞன் என்கிற அடிப்படையில் அந்த விருது மாற்றுத்திறனாளிகள் தினமான 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு சேலம் தமிழ் சங்கம் திரைக்கலைச்சித்தர் என் விருதினை அளித்துள்ளது. இந்த நிலையில்தான், 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் திகதி வேலூரில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் ஜெருசலேம் என்ற நிறுவனம் எனக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது.
தற்போதும் நடித்துக் கொண்டிருக்கும் கிங்காங், காமெடி துணை நடிகர்களைக் கொண்டு பல்வேறு விழாக்களுக்கு மேடை நிகழ்ச்சிகளும் செய்து வருகிறார்.
திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. தன் திறமையால் முன்னால் வந்திருக்கும் இவர், ஊனமுற்ற பலருக்கும் நம்பிக்கை நட்சத்திரம் என்றால் இது மிகையாகாது.
சிலர் தனது குறைகளை எண்ணி திறமைகளை முடக்கி வைத்துள்ளனர். ஆனால் இவர் ஆரம்பத்தில் பல்வேறு விமர்சணங்களை கண்டாலும் அனைத்தையும் தகர்த்து தள்ளி விட்டு இன்று ஒரு சாதனையாளராகவே பார்க்கப்படுகின்றார்.