ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரணைமடுவுக்கு இன்று (07) விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகளை திறக்கும் நிகழ்வினை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழர் பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் குழப்ப நிலைகள் நிலவி வரும் நிலையில் ஜனாதிபதி தனது விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிகிறது.
மேலும் குறித்த பகுதியினை அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ்மா அதிபர் கேபி மகிந்த குணரட்ன, கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள்,
நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக இரணைமடு குளத்திற்கு சென்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.