Loading...
யாழ்ப்பாணத்தில் பால்நிலை வன்முறைக்கெதிராக அமைதி ஊர்வலமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றது.
யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் வேலைத் தளங்களில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இல்லாது ஒழிப்போம் என்ற தொணிப் பொருளில் இவ் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது.
யாழ் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் நாவலர் கலாச்சார மண்டபம் வரை சென்று நிறைவடைந்தது.
பெண்களை ஒதுக்காது புதிய வாய்ப்புக்களை வழங்குவோம்,நான் எல்லா வகையான வன்முறைக்கும் எதிரானவள்,வன்முறையை தவிர்ப்போம் பெண்களை வாழவிடுவோம் உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கையில் ஏந்தியவாறு பெண்கள் ஊ்வலத்தில் பங்குபற்றியிருந்தனர்.
Loading...
ஊர்வலத்தினை தொடர்ந்து யாழ் அரச அதிபரிடம் கோரிக்கை மகஜரும் கையளிக்கப்பட்டது.
Loading...