புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் ஒரு தொகுதியினருக்கு புனர்வாழ்வு அதிகாரசபையினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
புனர்வாழ்வு அதிகாரசபையின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் கேணல் வஜிர மடுகல்ல தலைமையில் யாழ். அரியாலை சர்வோதய நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) இந்த உதவித் திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 16 குடும்பங்களிற்கு பசு மாடுகளும், 42 குடும்பங்களுக்கு ஆடுகளும் இதன்போது வழங்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன், புனர்வாழ்வு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் ஹேமன் பெர்னாண்டோ, யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் சுதர்சன் உள்ளிட்ட பலரும் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.