Loading...
கனடாவின் எட்மன்டன் பகுதியிலுள்ள வங்கி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
எட்மன்டன் 50வது எவன்யூ பகுதியிலுள்ள பிரபல வங்கி ஒன்றில் அண்மையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
Loading...
இந்தநிலையில் குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் ஒளிப்படத்தினை வெளியிட்டுள்ள பொலிஸார், சந்தேக நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்களை 780-980-7200 அல்லது 1-800-222-8477 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.
Loading...