தமிழகத்தில் இரண்டு திருமணம் செய்த பெண் தனது குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலையை சேர்ந்த தம்பதி தங்கதுரை- ரம்யா. இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் அனுதினமும் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்தது.
இதற்கு காரணம் பக்கத்து வீட்டில் வசித்து வந்த மணிமாறன் என்பவரை ரம்யா காதலித்தது தான். இருவரும் நெருங்கி பழகிய நிலையில் கர்ப்பமான ரம்யா குழந்தையை பெற்றெடுத்தார்.
பின்னர் தங்கதுரையுடன் சண்டை அதிகமான நிலையில் அவரை பிரிந்து மணிமாறனை திருமணம் செய்த ரம்யா இரண்டாவது கணவர் மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் இந்த குழந்தை எனக்கு பிறந்ததில்லை. உனக்கு நான் 2-வது கணவன் தானே, இன்னமும் நீ நிறைய பேரை கல்யாணம் செய்திருப்பாய் என கூறி ரம்யாவுடன் மணிமாறன் சண்டை போட்டு வந்தார்.
இதையடுத்து மீண்டும் முதல் கணவனிடம் தஞ்சம் அடைய ரம்யா சென்ற நிலையில் அவர் ஏற்று கொள்ளவில்லை. இது எல்லாவற்றுக்கும் காரணம் குழந்தை தானே என ஆத்திரமடைந்த ரம்யா தனது குழந்தையை காலால் மிதித்தும் கயிற்றால் இறுக்கியும் கொன்றிருக்கிறார். மேலும் மண்ணெண்ணெயை குடித்து தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார்.
ஆனால் அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரம்யாவை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் விரைந்து வந்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விட்டு ரம்யாவின் இரண்டு கணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.