இன்றைய காலகட்டத்தில் அரசாங்கத்தில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையினால் யாரும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது” என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரட்ண தில்ஷான் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டே திலக ரட்ண தில்ஷான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட தில்ஷான்,“நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கிய அரசியலமைப்பின் ஒழுங்கு முறைகள் முறைப்படுத்தப்பட்டு மக்கள் விரும்பக் கூடிய பெரும்பான்மையுள்ளதோர் அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
நிலையான அரசாங்கம் ஒன்று இல்லாது ஜனாதிபதி மாத்திரம் இருக்க கூடிய அரசாங்கம் இருப்பதால் மக்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. இந் நிலை மாற்றமடைய வேண்டும்.
இலங்கையில் ஒரு காலகட்டத்தில் இடம்பெற்ற யுத்த சூழலில் பாகிஸ்தானிற்கு சென்று கூட கிரிக்கெட் விளையாட முடியாத நிலை காணப்பட்டது.
இலங்கை மக்கள் நிம்மதியற்ற நிலையில் அச்சதோடு வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது. இவையனைத்திற்கும் தீர்வை கொண்டு வந்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
ஒரு விளையாட்டு வீரன் என்ற வகையில் மக்களுடைய ஆதரவை பெற்றுள்ள நிலையில் இலங்கை மக்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் நான் நன்கு அறிவேன்.” என தெரிவித்தார்.