நாடாளுமன்ற உறுப்பினர்களை பேரம் பேசும் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் தரப்புக்களின் பலத்தை அதிகரித்துக் கொள்ளும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரபூர்வமற்ற அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான பேரம் பேசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியனவற்றிற்கு இதுவரையில் 117 உறுப்பினர்கள் ஆதரவளிப்பதனால் தங்களது பக்கத்தை பலப்படுத்திக் கொள்ள மஹிந்த-மைத்திரி தரப்பு முயற்சிக்கின்றது.
எதிர்வரும் 12ம் திகதி நாடாளுமன்றம் மீளவும் கூட உள்ள நிலையில் பேரம் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.
அண்மைய நாடாளுமன்ற அமர்வுகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சுமார் 60 கோடி ரூபாய் வரை விலை பேசப்படுவதாக தெரிய வருகிறது.
இதன் காரணமாக தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் பேரம் பேசும் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.