Loading...
எட்மன்டன் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கத்திக்குத்துத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
உள்ளுார் நேரப்படி நேற்றிரவு(வியாழக்கிழமை) குறித்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த இருவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Loading...
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது குறித்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸால் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, அண்மைக்காலமாகவே எட்மன்டன் பகுதியில் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Loading...