வாணி ராணி சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு இன்று என, நடிகை ராதிகா சரத்குமார் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக வாணி ராணி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகை ராதிகா சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று இந்த சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு என ராதிகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வாணி ராணி’ சீரியல் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கலவையான எண்ணோட்டங்கள் எழுகின்றன. நீண்ட பயணம்.நிறைய அனுபவம். சில மகிழ்ச்சியான தருணங்கள்.
சில வருத்தமான அழுத்தமான சோர்வான தருணங்கள். ஆனால், ராடானுக்காக களைப்பின்றி உழைத்த அனைவருக்கும் நன்றி. நம்பிக்கையும் ஊக்கமும் அளித்த பிரபல தொலைக்காட்சிக்கு நன்றி,” என தெரிவித்துள்ளார்.