நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானிக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் திகதி குறிப்பிடப்படாமல் இந்த தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரையில், இந்த தடையுத்தரவு நீடிக்கப்படுவதாக, உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த, மனுக்கள் மீதான உயர் நீதிமன்றின் இன்றைய நான்காம் நாள் விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளது.
இந்த நிலையில், இந்த தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்தோடு உயர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி இன்று பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ச உட்பட தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.