மகிந்தவினால் எனக்கு ஒருவருக்கு மட்டுமே ஆபத்து. ஆனால் ரணிலை பிரதமராக நியமித்தால் முழு நாட்டிற்குமே ஆபத்து என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் சபாநாயகருடன் பல தடவைகள் தொலைபேசி ஊடாகவும், நேரடியாகவும் கதைத்து பல பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதனிடையே அரசியல் அமைப்பின் படி ஜனாதிபதி ஒருவர் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் எந்தவொரு நேரத்திலும் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க முடியும்.
எனினும், நான் மற்றவர்களின் செயற்பாடுகளுக்கு இணங்க தயாராக இல்லை. இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இது வரையிலும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.