யுவதியொருவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு பதிவு செய்த நிலையில் மயங்கி விழுந்து அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம், குறித்த யுவதி மூன்று பக்க கடிதத்தை ஒப்படைத்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர் அதை வாசித்துக் கொண்டிருந்த போது, அந்த யுவதி மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக விரைந்து செயற்பட்ட பொலிசார், அவரை அவசர அம்பியூலன்ஸிற்கு தூக்கி சென்றபோது, வாயிலிருந்து நுரை வெளியேறியது.
நச்சு திராவக மணமும் வீசியது. இதையடுத்து, அவசர அம்பியூலன்ஸில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் யுவதி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகி்னறுது.
குறித்த பரபரப்பு சம்பவம் நேற்று நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
குறித்த யுவதி நஞ்சு அருந்தி விட்டு பொலிஸ் நிலையம் சென்று தான் கொண்டு சென்ற கடிதத்தை பொலிசாரிடம் ஒப்படைத்து விட்டு மயங்கி விழுந்துள்ளார்.
அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.