யாழ்ப்பாணம்- கோப்பாய் பகுதியில் இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
யாழ். கோப்பாய் மத்திய கல்வியியற்கல்லூரி ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் மீது இத்தாக்குதல் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவத்தில் படுகாயமடைந்த 53 வயதான செல்லத்துரை செல்வரஞ்சன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்பெற்றோல் குண்டுத் தாக்குதலில் வான் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் தீக்கிரையாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த வாரம் யாழ்.நகரத்தை அண்டிய பிரதேசத்திலும் இதே பாணியில் பெற்றோல் குண்டுத் தாக்குதுல் நடத்தப்பட்டதுடன், முச்சக்கர வண்டியொன்றும் தீக்கிரையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.