கொழும்பில் பாரிய போராட்டமொன்றை நடத்தி பின்னர் பேரணியாக சென்று ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்போராட்டத்துக்காக நாடு முழுவதிலும் இருந்து ஒரு இலட்சம் பேரை கொழும்பிற்கு கொண்டுவந்து மூன்று நாட்களுக்கு போராட்டம் மற்றும் பேரணியை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க மறுத்துவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்காகவே இப்பாரிய பேரணியை நடத்த தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்போராட்டத்தின்போது ஜனாதிபதியின் வதிவிடம், செயலகம் என்பனவற்றை முற்றுகையிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை உச்சநீதிமன்றத் தீர்ப்பை பொருட்படுத்தாமல், இப்பேரணியை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடுகளை செய்துவருவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.