Loading...
சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரிய உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்கள் 14 வது சுற்று சுதந்திர வர்த்தக மற்றும் முதலீடுகள் தொடர்பான விரைவு பேச்சுவார்த்தைகளை பீய்ஜிங்கில் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று (வௌ்ளிக்கிழமை) இடம்பெற்ற குறித்த பேச்சுவார்த்தைகளின் போது வர்த்தக துறையை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
Loading...
பிராந்திய விரிவாக பொருளாதார கூட்டிணைவு அடிப்படையில் இந்த நாடுகள் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராயும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த நாடுகள் 20 சதவீதத்தை கொண்டுள்ளமை அவற்றின் பொருளாதார நிலைத்தன்மையை சுட்டிநிற்பகதாக சீனாவின் வர்த்தக துறை அமைச்சர் வாங் ஷோவுவென் தெரிவித்துள்ளார்.
Loading...