வட கிழக்கு பிரேசிலில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளை முயற்சியொன்றில், பொலிஸாருக்கும் கொள்ளையர்கள் சிலருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குழந்தைகள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர்.
பிரேசிலில் இரண்டு இடங்களில் நேற்று (வௌ்ளிக்கிழமை) வங்கிக் கொள்ள முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.
உயிரிழந்தவர்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களும், பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக பிராந்திய ஆளுனர் அலுவலகம் தகவல் வௌியிட்டுள்ளது.
மிலாகிரஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் மரணித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் கொள்ளையர்களால் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.
வங்கிக் கொள்ளையர்கள் ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைக்க முற்பட்ட போது பொலிஸார் அதனை தடுத்த போதே மோதல் இடம்பெற்றுள்ளது.