மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வானைத் தொடும் கட்டடங்களுக்கு இடையே புதியதோர் உணவகம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
நகரில் 45 மீட்டர் உயரத்தில் தொங்குகிறது Santa in the Sky என்கின்ற இந்த உணவகம்.
பாரந்தூக்கியின் இறுக்கமான பிடியில் உள்ள சறுக்குவண்டிதான் உணவகத்தின் வெளிப்புறம். அதனுள் கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவம் உள்ளது. அவரோடு உட்கார்ந்து உணவை உண்ணும் வகையில் இந்த உணவகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் உணர்வோடு உற்றார் உறவினர்களுடன் உணவை ரசிக்கும் புதுமையான அனுபவம், இந்த உணவகத்தில் கிடைக்கும் என்கின்றார் உணவகத்தின் உரிமையாளர்.
அத்துடன், கலைமான்கள் இழுத்துச் செல்லும் சறுக்குவண்டியில் பயணம் செய்யும் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் போலவே பறந்துகொண்டே உணவை ருசிக்க முடியும் எனவும் உணவகத்தின் உரிமையாளர் கூறுகின்றார்.