சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘பேட்ட’ திரைப்படத்தின் “Ullaallaa’ இரண்டாவது சிங்கிள் ப்ரொமோ பாடல் வெளியான நிலையில், அது குறித்து மனம் திறந்தார் இசை அமைப்பாளர் அனிருத்.
ரஜினிகாந்தின் ‘பேட்ட’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ‘தில்லு முல்லு’ திரைப்படத்தில் ரஜினி தனது முதலாளியிடம் பொய் சொல்லிலிட்டு கால்பந்து விளையாட்டிற்கு செல்லும் போது, அந்த பாடல் காட்சியில் இருந்து ஈர்க்கப்படுவதாக இசை அமைப்பாளர் அனிருத் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘பேட்ட’ படத்தின் “Ullaallaa’ இரண்டாவது சிங்கிள் ப்ரொமோ பாடல் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியானது.
அதிரடியாக வெளிவந்துள்ள இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவருகின்றது.
இத்திரைப்படத்தில் சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, இயக்குனர் மகேந்திரன், மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், குருசோமசுந்தரம், சனத் ரெட்டி உட்பட பலர் நடித்துள்ள இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. ரஜினியின் திரைப்படத்திற்கு முதன்முறையாக அனிருத் இசைத்துள்ளார்.
இதற்கு முன்னர் வெளியாகிய முதல் சிங்கிள் மரண மாஸ் ‘தலைவர் குத்து’ பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நேற்று வெளியாகிய இரண்டாவது ப்ரோமோவைத் தொடர்ந்து எதிர்வரும் 9ஆம் திகதி படத்தின் ஏனைய பாடல்கள் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.