ரஜினி நடிப்பில் சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ‘பேட்ட’ திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார்.
2019 ஆண்டு தைப்பொங்கல் கொண்டாட்டமாக ‘பேட்ட’ வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.
எனினும் இந்த ஆண்டு ரஜினியின் நடிப்பில் ‘காலா’, ‘2.0’ என இரு படங்கள் வெளியாகியுள்ளன. 2.0 வெளியாகி சில வாரங்களே ஆகியுள்ளன. இதையடுத்து 2 மாதங்களில் அடுத்த படம் எனும்பொழுது ரஜினியின் படத்துக்கான எதிர்பார்ப்பை இது குறைத்துள்ளதாக தெரிகிறது.
இதனிடையே ‘பேட்ட’ படத்தை பொங்கலுக்கு வெளியிட வேண்டாம், தமிழ் புத்தாண்டுக்கு வெளியிடலாம் என ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. இதனை ரஜினியும் குறிப்பிட்டுள்ளராம்.
மேலும் ரஜினியின் இந்த கருத்தை படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஏற்று கொண்டதாக தெரிகிறது. ஏனெனில் அவர்களது கடைசி பல டுவிட்களில் #pettapongal என்ற விடயம் இடம்பெறவில்லை.
எனவே பொங்கல் மோதலில் இருந்து ‘பேட்ட’ தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் கசிந்துள்ளது.