நீதிமன்ற வைத்திய பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு சென்ற யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட குறித்த வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியை பிணையில் நுகேகொட மஜிஸ்திரேட் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
கணவர் தாக்கியதிற்காக குறித்த யுவதி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் நீதிமன்ற வைத்திய சோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அங்கு குறித்த யுவதியுடன் சென்ற தாதியையும் யுவதியின் தாயையும் வைத்திய அதிகாரி தனது அறைக்கு வெளியில் நிற்க சொல்லி விட்டு சோதனை எனும் பெயரில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பின்னர் தனக்கு நேர்ந்ததை குறித்த யுவதி ஜயவர்தனபுர வைத்தியசாலை பொலிஸில் முறைப்பாடாக பதிவு செய்துள்ளார்.
இதன் அடிப்படையில் வைத்திய அதிகாரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் நுகேகொட மஜிஸ்திரேட் வசந்த குமார ஒரு லட்சம் சரீர பிணையில் குறித்த வைத்திய அதிகாரியை விடுவித்துள்ளா