முல்லைத்தீவு கடலைச் சுற்றிய சிங்களக் குடியேற்றங்களும் முல்லைத்தீவுக் காட்டுப் பகுதிகளுக்குள் சுதந்திரமாக மக்களை அனுமதிக்காமையும் ஒரு வட்டத்துக்குள் தமிழ்மக்களை கடல் மற்றும் காட்டுச் சூழலால் சுற்றி வளைத்து ஆங்காங்காங்கே புத்த விகாரைகளை நாட்டி குறித்த காலத்தின் பின்னர் எஞ்சிய தமிழரை அழித்தல் அல்லது சிங்களவர்களாய் மாற்றல் அதன் தொடர்ச்சியே இரணைமடு.
சிறீலங்காவின் பிரதமர் பிரச்சினை இழுபறியிலும் மைத்திரி சிங்கக் கொடிசகிதம் இரணைமடு வந்ததன் நோக்கமென்ன குளம் நிரம்பி வழிகிறது தமிழ் விவசாயிகள் பாதிக்கப் படுகின்றனர் என்றா அல்லது குளத்தை திறப்பதும் பூட்டுவதும் யாருக்கும் தெரியாததா இல்லை இல்லவே இல்லை.
முல்லைத்தீவு முற்றுகை போலவே இரணை மடுவும் இரணை மடுவைச் சுற்றி சிங்களக் குடியேற்றம் அருகருகே புத்த விகாரை ஒரு அரைவட்ட முற்றுகை என்று கூறலாம்.
இரணை மடு விலிருந்து மல்லாவி மாங்குளத்தை ஊடறுக்கும் பிரதான சந்தியை மையமாகக் கொண்டு கொக்காவில் ரவரை நேர்கோடாக்கி இராணுவக் குடியிருப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது இங்கே இராணுவத்தினரின் குடும்பங்கள் வந்து போவர் வெளியே தெரியாத சிறு சிறு கிராமங்கள் காடுகளுக்குள் முளைவிட்டு பத்து வருடங்களுக்கு மேலாச்சு.
இன்று மைத்திரியின் சிங்கக்கொடிப் பிரசின்னம் இரணை மடுச் சிங்களக் குடியேற்றமாகப் பின்னாளில் மாறும் என்பதற்கு சான்று பகர்கிறது.
இரணை மடுக் குளத்தின் இருவழிப்பாதையே மக்கள் பயன்பாட்டிலுள்ளது அதைச் சுற்றி இராணுவ கேந்திரநிலையம் அமைந்துள்ளது மொத்தத்தில் மக்களுக்கான குளமாக அது இல்லை இந்த நிலையில்.
பூசை வைக்கும் அன்ரிமாரைப் பாத்து வையுங்கோ மக்காள் இந்து சமயத்திலோ கத்தோலிக்க சமயத்திலோ மனிதனுக்கு பூசை செய்வது பற்றிப் படிக்கவில்லையே நாம்.
இந்த அன்ரிமார் நல்லா பூசை வைக்கினம்.
மற்றது.
தமிழ் அரசியல் வாதிகளும் மைத்திரியை கலியாணப் பொம்பிளையை அழைக்கும் தோழர்களாகச் சென்றமைதான் பம்பலானதும் பயங்கரமானதும். தமிழ் மக்கள் ஏழை விவசாயிகள் மீனவர்கள் விழிப்பாயிருக்க வேண்டும் மைத்திரிக்கு முன் தமிழ் அரசியல் விலங்குகள் மீது.