16 வயது இளைஞன் ஒருவனால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பிரித்தானிய இளம்பெண்ணின் உள்ளாடையில் அவளது வளர்ப்புத் தந்தையின் டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அவளது பெற்றோரே அவளைக் கொலை செய்து விட்டு நாடகமாடுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர்கள் இருவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.
பிரித்தானியாவைச் சேர்ந்த Viktorija Sokolova (14), Wolverhamptonஇலுள்ள பூங்கா ஒன்றில் அரை நிர்வாணமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். அவளைக் கொலை செய்ததாகவும் வன்புணர்வு செய்ததாகவும் 16 வயது இளைஞன் ஒருவனை பொலிசார் கைது செய்தனர்.
இந்நிலையில் தடயவியல் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் Viktorijaவின் உள்ளாடையில் அவளது வளர்ப்புத் தந்தையான Saidas Valantinasஇன் விந்தணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
பூங்காவில் Viktorija இறந்து கிடந்த இடத்திற்கு சற்று தொலைவில் இருந்த ஒரு குப்பைத்தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட அவளது உள் கால்சட்டையும் வெண்ணிற ஜீன்சும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டபோது, அவற்றிலும் Saidasஇன் விந்து திரவம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து Saidasம் அவரது மனைவியும், Viktorijaவைப் பெற்ற தாயுமான Karolina Valantinieneம் நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்டார்கள். வழக்கறிஞர் Saidasஇடம், நீங்கள் Viktorijaவை பூங்காவில் கண்டுபிடித்ததால் பாலியல் துஷ்பிரயோகம் செய்தீர்களா? என்று கேட்க, இது அர்த்தமற்ற கேள்வி, இந்த குற்றச்சாட்டை மறுக்கிறேன் என்றார் அவர்.
வழக்கறிஞர் தொடர்ந்து, Viktorijaவை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததைத் தொடர்ந்து அவளை மூர்க்கமாக தாக்கிக் கொலை செய்தீர்கள் இல்லையா? என்று கேட்க, அதையும் மறுத்தார் Saidas.
பின்னர் நீதிபதி Karolinaவிடம் உங்கள் மகள் கொலையிலிருந்து உங்கள் கணவரை காப்பாற்ற முயல்கிறீர்களா? என்று கேட்க, அதை அவர் மறுத்ததும், நீங்கள் உங்கள் மகளைக் கொலை செய்தீர்களா? என்று கேட்க அதையும் மறுத்தார் அவர்.
தற்போதைக்கு Karolina மீதும் Saidas மீதும் எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், தடயவியல் சோதனை முடிவுகளையடுத்து வழக்கில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பங்களால், அவர்கள் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறார்கள் என்றே கூறலாம்.