பிரபல மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பிரபலமடைந்தவர் நிஷா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கும், இவரது குரலுக்குமென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில், இவர் அதே தொலைக்காட்சியில் வேறொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த முரளியை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு ஆங்கர் வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டு ஃபோரஸ் என்று ஒரு பொட்டிக் நடத்திக் கொண்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, மீண்டும் சன் டீவி மூலம் தொகுப்பாளியாளினியாக ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நிஷா தனது மகள் குறித்து பேசியதாவது,
பொட்டிக் ஒரு பக்கம் நல்லபடியா போய்ட்டு இருக்கு. எங்க பொண்ணு ஜீஶ்ரீ இப்போ யூகேஜி படிக்கிறாங்க. ரொம்பப் பொறுப்பான குழந்தை. சீரியல் வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. சரி பாப்பாதான் வளர்ந்துட்டாங்களே ரீ-என்ட்ரி கொடுக்கலாமேன்னு தோணுச்சு. சீக்கிரமே என் ரசிகர்களைச் சந்திக்க வர்றேன்.
அன்பான கணவர், கூடவே என் பொண்ணைத் தங்கமாத் தாங்குற எங்கப்பா அம்மா, என் பொண்ணு. இவங்கதான் என் பலமே.
என் குழந்தை ரொம்பப் பொறுப்பானவங்கனு சொன்னேன் இல்லியா… நான் வெளிய போறேன்னா என் பொண்ணுகிட்ட `அம்மா ஷூட்டிங் போய்ட்டு சீக்கிரமே வர்றேன்.. நீ அம்மம்மாவைப் பார்த்துக்கோன்னு அவளைப் பெரிய மனுஷியாக்கிட்டுக் கிளம்பிப் போவேன் அந்த அளவிற்கு பொறுப்பான மகள் அவள் என்று கூறியுள்ளார்.
மேலும், என் குழந்தைக்கு எது வேண்டுமென்றாலும் பார்த்து பார்த்து தான் செய்து கொடுப்போம். ஜேன்னா உலகம் .. நியூமராலஜியில ஜீன்னு வைக்கணும்னு சொன்னாங்க. ஶ்ரீன்னா லட்சுமி .. `உலக லட்சுமி ங்கிறதுதான் அவங்க பேருக்கான அர்த்தம். ஆனா நான் என் பொண்ணை `கும்முட்டி ன்னு தான் கூப்பிடுவேன். வேற ஒண்ணுமில்ல… பொண்ணு கொழுகொழுனு பொறக்கணும்னு ஆசை. அதனால அவ வயித்துல இருக்கிறப்பவே கும்முட்டினு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன்.