பசித்தால் புலி கூட புள்ளை சாப்பாடும் என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல் ஆடு ஒன்று பசியில் பணத்தை சாப்பிட்ட சம்பவம் செர்பியாவில் அறங்கேறியுள்ளது.
செர்பியாவின் அரன்ஜெலோவாக் அருகே ரனிலோவிக் என்ற கிராமத்தை சேர்ந்த சிமிக் இனக் குடும்பம் விவசாய தொழில் செய்து வந்துள்ளது.
இந்த விவசாய குடும்பத்தினர் புதிதாக 10 ஹெக்டர் நிலம் வாங்க ரூ.16 லட்சம் மதிப்பிலான பணத்தை மேஜையில் வைத்து விட்டு, கதவை மூடாமல் வயலுக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று, வீட்டிற்குள் நுழைந்து மேஜையில் இருந்த பணத்தை பார்த்ததும், அதனை சாப்பிட்டு பசி தீர்த்துள்ளது.
வயலில் இருந்து வீடு திரும்பியவர்கள் குடும்பத்தினர் காணாமல் போன பணத்தை தேடியுள்ளனர். அப்போது ஆட்டின் வாயில் பணத் துகள்கள் மிச்சம் இருப்பதை கண்டு ஆச்சரியமும் கோபமும் கொண்டனர்.
மொத்த பணத்தையும் தின்று தீர்த்த ஆத்திரத்தில் அந்த ஆட்டை அந்த குடும்பத்தினரே கொன்று சமைத்து சாப்பிட்டதாக தெரிவந்துள்ளது.