அழகு என்றதும் நினைவுக்கு வருவது சீனப் பெண்கள்தான். முதுமையானாலும் அழகு மட்டும் என்றும் குறையவே குறையாது. அவர்களை போல என்று அழகினை பாதுகாக்க இயற்கை வழிமுறைகள் பல உண்டு.
தற்போது முகப்பரு பிரச்சினையானது அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்த பிரச்சினையை சரிசெய்ய எத்தனையோ வழிகள் உள்ளன.
அதில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் முறை கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவது தான். அவற்றால் பெரும்பாலும் முகப்பருக்கள் போவதை விட, அதனால் பருக்கள் வந்தது தான் அதிகம்.
சிலருக்கு அந்த பருக்களால் வடுக்கள் கூட வந்துவிடுகின்றன. அதனால் பலருக்கு அந்த வடுவானது, நீண்ட நாட்கள் போகாமல் கருமையாக இருக்கின்றன.
எனவே இத்தகைய நிலை ஏற்படாமல் இருப்பதற்கு, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான இயற்கை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
டூத் பேஸ்ட்
முகப்பருக்களை போக்குவதில் டூத் பேஸ்ட் சிறப்பானதாக உள்ளது. அதற்கு முகத்தை சுத்தமாக கழுவி, மாய்ச்சுரைசர் தடவியப் பின், சிறிது டூத் பேஸ்ட்டை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருவானது எளிதில் போய்விடும்.
குறிப்பாக அவ்வாறு டூத் பேஸ்ட்டை பயன்படுத்தும் போது, டூத் பேஸ்ட் ஜெல்லை பயன்படுத்தக் கூடாது.
மேலும் பேஸ்ட் வைப்பதற்கு முன், அதனை ஒரு பருவில் வைத்து, ஏதேனும் எதிர்வினை தெரிகிறதா என்று பார்த்து விட்டு, பின் தடவ வேண்டும். ஏனெனில் சிலருக்கு இது அழற்சியை உண்டாக்கும்.