கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கு திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்து ஜொலித்து வருகின்றனர்.
குறிப்பாக ஹாரிஸ் கல்யாண், ஆரவ், மகத், ஐஸ்வர்யா தத்தா , யாஷிகா, ஜூலி என இதில் பங்கேற்ற அத்தனை பிரபலங்களும் தங்களுக்கான எதிர்காலத்தை அமைத்துக்கொண்டனர்.
அந்த வகையில் தற்போது இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஷாரிக். இவர் பிரபல நடிகர்களான உமா மற்றும் ரியாஸ்கான் நட்சத்திர தம்பதிகளின் மகன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் அனைவராலும் பரவலாக அறியப்பட்டாலும், இவர் அறிமுகமாகியது வில்லன் கதாப்பாத்திரத்தில் தான் . நடிகர் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ‘பென்சில்’ படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு இளம் வில்லன் என்கிற பெயரை பெற்று தந்தது.
அதனை தொடர்ந்து சிறந்த கதாப்பாத்திரம் கிடைக்காதமையால் படங்களில் நடிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் அவரின் பக்கம் தற்போது அதிர்ஷ்ட காற்று வீச ஆரம்பித்துள்ளது. கதாநாயகனாக முதல் தடவையாக அவதாரம் எடுத்துள்ளார்.
அவர் நடிக்கவுள்ள படத்தின் பெயர் ‘உக்ரம்’ என்றும் இந்த படத்தை ‘அட்டு’ படத்தை இயக்கிய ரத்தின்லிங்கா இயக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.