கஜா புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உரையாடிய போது அவர்களின் நிலை கண்டு நடிகர் சமுத்திரக்கனி கண்ணீர் சிந்தியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை நடிகர் நேரடியாக சந்தித்துள்ளார்.
அது மாத்திரம் இல்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணம் சேகரித்து கொடுத்து உதவி செய்துள்ளார்.
இந்த கஜா புயலால் இந்தியாவின் பல மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான உயிர்களும், பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்திருந்தன.
புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் பெரும் உயிருடற் சேதத்தை ஏற்படுத்துவது வழமை. இம்முறை கஜா புயல் இதுவரை வாழ்ந்துவந்த வாழ்க்கையையே உருமாற்றி வாழ்வாதாரத்தையே சீர்குலைத்து விட்டது.
இனி எதை நம்பி வாழ்வது, என்ன செய்து பிழைப்பது என்று பல பகுதிகளில் மக்கள் பலரும் செய்வதறியாது தவிக்கும் ஒரு நிலையை கஜா புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்த நிகழ்ச்சியின் காட்சிகள் சிறந்த உதாரணம் ஆகும்.
இதேவேளை, கஜா புயலின் தாக்கத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தையின் பின்னணியை கூறும் போது அரங்கத்தில் உள்ள அனைவரும் கண்ணீர் சிந்தியுள்ளனர்.